தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், சேலம், நாமக்கல், நீலகிரி, கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், வரும் 30ஆம் தேதி வரை தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.