அர்மேனியா, அஜர்பைஜான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அஜர்பைஜான் எல்லையையொட்டி ஈரான் அரசு படைகளை குவித்து வருகிறது.
ஈரானை போலவே அஜர்பைஜானிலும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
இருந்தபோதும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் அஜர்பைஜான் அரசு ஆதரவுடன் அங்கு முகாமிட்டப்படி தங்கள் அணு ஆயுத நடவடிக்கைகளை உளவு பார்த்துவருவதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.
இதனால் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் அர்மேனியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஈரான் அரசு அஜர்பைஜான் எல்லையில் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை குவித்து வருகிறது.