அமைச்சர்கள், தி.மு.க. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், தவறான பொருள்படும்படி சிலர் பரப்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கம் கொண்டு சிலர் தொடர்ந்து பாடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை கவனிக்க வேண்டும் என்றும் திமுகவினருக்கு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.