பெட்ரோல் குண்டு வீச்சு.. அடிச்சி மிதிச்சி விசாரிக்கிறாங்க.. இளைஞரை கதற விட்ட போலீஸ்..!
Published : Sep 26, 2022 3:50 PM
பெட்ரோல் குண்டு வீச்சு.. அடிச்சி மிதிச்சி விசாரிக்கிறாங்க.. இளைஞரை கதற விட்ட போலீஸ்..!
Sep 26, 2022 3:50 PM
மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட இளைஞர் போலீசார் தன்னை தாக்குவதாக கூறி, நாடகம் நடத்தி தப்பிக்க முயன்ற நிலையில் போலீசார் அவரை காருக்குள் திணித்து அழைத்துச்சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...
மதுரையை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் மர்ம ஆசாமி ஒருவன் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றான். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது முகத்தை மூடிக் கொண்டு கையில் பெட்ரோல் குண்டுடன் ஓடி வந்து அடுத்தடுத்து 2 முறை குண்டை வீசிவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பியது தெரியவந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு ஏற்கனவே ஒரு முறை பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைதானதால் எஸ்.டி.பிஐ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.எஸ். காலனியை சேர்ந்த அபுதாகிர் என்பவரை பிடித்துச்சென்று விசாரித்தனர்.
அதாவது தப்பிச்சென்றவர்கள் சென்ற வழியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசியது அபுதாகிர் தான் என்பதை உறுதி செய்த பின்னரே போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அபுதாகிருக்கு ஆதர்வாக சில வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு உள்ளே நுழைய முயன்றதால் காவல் நிலைய இரும்பு கேட்டு உள்பக்கமாக இழுத்துப் பூட்டப்பட்டது. அபுதாகிரை அடிக்காமல் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்
போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். அதற்குள்ளாக போலீஸ் பிடியில் இருந்து கதவு பக்கம் ஓடி வந்த அபுதாகிர் தன்னை போலீசார் அடித்து உதைப்பதாக கத்தி கூச்சலிட்டார்
அத்தோடு நிற்காமல் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்ற போது போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து அடம் பிடித்த அபுதாஹீர் , எதிர்குரல் எழுப்பி ஆதாரவாளர்கள் துணையுடன் தப்பிக்க எத்தனித்தார்
ஆனால் போலீசார் அவரை இறுக்கமாக பிடித்து வாகனத்துக்குள் திணித்து பத்திரமாக நீதிமன்றம் அழைத்துச்சென்றனர். இதையடுத்து அங்கிருந்த அபுதாகீரின் ஆதரவாளர்கள் போலீசுக்கு எதிராக கோஷமிட்டு கலைந்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அபுதாஹீர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.