​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டிய போது, மூன்று ஊழியர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம்.!

Published : Sep 23, 2022 8:34 PM

மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டிய போது, மூன்று ஊழியர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம்.!

Sep 23, 2022 8:34 PM

சென்னை ஐசிஎஃப் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டிய போது, மூன்று ஊழியர்கள் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர்.

செஞ்சியைச் சேர்ந்த அருண்குமார், கொளத்தூரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அரக்கோணம் பாலமுருகன் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 2 அடி ஆழம் பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கும் போது, தரைவழியாக செல்லும் மின்சார கேபிளில் சேதம் ஏற்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் பணியில் இருந்த ஊழியர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி வீசப்பட்டனர். உடனடியாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மூவரும் மீட்கப்பட்ட நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.