சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 17 நாட்களுக்குப் பிறகு காணாமல் போன இளைஞர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
28 வயதான நீர்மின் நிலைய ஊழியர் கான் யூ கடந்த 5-ம் தேதி சிச்சுவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு காணாமல் போயுள்ளார். குறுகிய பார்வை கொண்ட கான், தனது கண்ணாடியை இழந்துவிட்டதால் வழி தெரியாமல் காட்டுப்பகுதியில் இருந்துள்ளார்.
மரத்தடியில் காயத்துடன் கிடந்த அவரை உள்ளூர் விவசாயி ஒருவர் கண்டுபிடித்தார். 17 நாட்களாக காட்டுப்பழங்களையும், தண்ணீரையும் உட்கொண்டு உயிர் வாழ்ந்ததாக கான் யூ தெரிவித்துள்ளார்.