​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாளரை தாக்கிய பயணி கைது

Published : Sep 23, 2022 4:20 PM



அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாளரை தாக்கிய பயணி கைது

Sep 23, 2022 4:20 PM

மெக்சிகோவில் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில், விமான பணியாளரை தாக்கிய பயணியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த புதன்கிழமை லாஸ் கபோஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணித்த 33 வயதான நபர், விமான பணியாளரிடம் தனக்கு காபி கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அதோடு, அவரது இருக்கையில் இருந்து எழுந்து முதல் வகுப்புக்கு அருகே காலியாக இருந்த இருக்கைக்கு சென்று அமர்ந்துள்ளார். மீண்டும் அவரது இருக்கைக்கு போகச் சொன்ன விமான பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், அவரது பின்மண்டையில் தாக்கியுள்ளார்.

விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிரங்கியதும் அந்த நபரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் வாழ்நாள் முழுவதும் அமெரிக்க ஏர்லைன்ஸில் பயணிக்க தடை விதிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.