நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில், குடிநீர் பிடித்து கொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெரிய கிணறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹாலோ பிளாக் கற்கள் மூலம் கட்டப்பட்டு வந்த தண்ணீர் தொட்டியில், கட்டுமான பணிகள் முழுமையாக முடிவுறுவதற்கு முன்பே தண்ணீர் நிரப்பி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
மற்றொரு மூதாட்டி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.