கேரள மாநிலத்தில் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதன்முறையாக ஏர் ஹோஸ்டஸ் ஆக தேர்வாகி உள்ளார்.
கண்ணூரை சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தன்- விஜி தம்பதியினரின் மகளான கோபிகாவுக்கு சிறு வயது முதலே ஏர்ஹோஸ்டஸ் ஆக பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் வயநாட்டில் உள்ள ட்ரீம்ஸ்கை ஏவியேஷன் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்த படிப்பை முடிப்பதற்குள் கோபிகாவுக்கு மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அங்கு மேலும் ஒரு மாத பயிற்சியை முடித்த பின் ஏர்ஹோஸ்டாக பணி அமர்த்தப்படுவார்.