பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக, ஒரு கூடாரத்தில் தற்காலிக பள்ளி அமைத்து பாடம் கற்பிக்கப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெய்த கனமழையால் பலூசிஸ்தான், சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடாரம் அமைத்து பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.