சென்னை வியாசர்பாடி பகுதியில் சாலையில் தேங்கி கிடந்த மழைநீரில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.
சஞ்சய்நகர் 2வது தெருவில் வசித்து வந்த உமாராணி என்பவர் நேற்றிரவு எண்ணெய் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது கனமழையின் காரணமாக சாலையில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்துள்ளது.
அதனை அறியாமல் உமாராணி தண்ணீரில் கால் வைத்தவுடன் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.