ரஷ்ய எண்ணெய் நிறுவன உரிமையாளர் ரவில் மகனோவ் மருத்துவமனையின் ஆறாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அவருடைய நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
67 வயதான இவர் மாஸ்கோவின் மத்திய மருத்துவ மருத்துவமனையில் ஆறாவது மாடியின் ஜன்னலில் இருந்து திடீரென கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
கிரெம்ளின் கிளினிக்' என்று அழைக்கப்படும் மருத்துவமனையில், இதய நோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.