ஹங்கேரிக்கு துபாய் வழியாக செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த இசையமைப்பாளர் இளையராஜா, மழை காரணமாக விமானம் தாமதமானதால் சுமார் 7 மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்தார்.
நேற்றிரவு 7.40 மணிக்கு இசையமைப்பாளர் இளையராஜா விமானம் நிலையம் வந்தடைந்த நிலையில், அவர் பயணிக்க வேண்டிய விமானம் மழை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.
நள்ளிரவு 12.40 மணிக்கு அந்த விமானம் மீண்டும் சென்னை வந்தடைந்த நிலையில், 2.40 மணியளவில் இளையராஜா துபாய் புறப்பட்டுச் சென்றார்.