ராஜஸ்தானைச் சேர்ந்த ஜவுளி நிறுவனம் ஒன்று மும்பை பங்குச் சந்தையில் அறிக்கையை தாக்கல் செய்யும் போது தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகாரி மரணம் அடைந்ததை குறிப்பிடும் போது ப்ளீஸ்டு டூ இன்ஃபார்ம் என்ற வழக்கமான சொல்லாடலைப் பயன்படுத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை நெட்டிசன்கள் தவறைச் சுட்டிக் காட்டியுள்ளனர். டெம்ப்ளேட்டுகளை அப்படியே கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் வந்த வினை இது என்று அவர்கள் விமர்சித்தனர்.
முதலீட்டாளர் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை இவ்வுலகம் கொடூரமாக நடத்தும் என்பதற்கும் இது ஒரு உதாரணம் என்று பதிவர் ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.