இலங்கைக்கு தற்போது உதவிகள்தான் தேவை என்றும், தேவையில்லாத நெருக்குதல் அல்ல என்று கொழும்புவில் உள்ள சீனத் தூதரிடம் கப்பல் வருகையை ஆட்சேபித்து இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
சீனாவின் உளவுக் கப்பல் இலங்கை அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து திரும்பிச் சென்றுள்ளது. எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பாதுகாப்பு காரணங்களைக் கூறி இலங்கையின் இறையாண்மையில் இந்தியா தலையிடுவதாக சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய அரசு, தேவையற்ற சர்ச்சைகளையும் மற்றொரு நாட்டின் தேவையில்லாத நெருக்குதலும் இலங்கைக்குத் தேவையில்லை. அதற்கு உதவிதான் இப்போது தேவை என்று இந்தியா சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.