கடந்த 15 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் ஏதுமின்றி உள்ள நிலையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு, காய்ந்த மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சென்னையில் விலை உயர்ந்துள்ளது .
பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்தால் அன்றாடம் பயன்படுத்தும் அத்திவாசிய மளிகை பொருட்கள் விலை உயர்வது வழக்கம், அதனை காரணம் காட்டி வியாபாரிகள் விலையை உயர்த்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லத நிலையிலும், புதிதாக வரிகள் ஏதும் விதிக்கப்படாத நிலையிலும் வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதாக கூறி பருப்பு , எண்ணெய், காய்ந்த மிளாகாய், மல்லி உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் பிஸ்கட், சோப்பு, சொப்புத்தூர், ஷாம்பு உள்ளிவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதாக அருப்புக்கோட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருப்பு வகைகளுக்கு பெயர் பெற்ற கோபிச்செட்டி பாளையம் மொடச்சூர் வாரச்சந்தையில் இந்த திடீர் விலை உயர்வால் வியாபரம் குறைந்துள்ளதாக சில்லரை வியாபரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் வி நாயக சதூர்த்தியை காரணம் காட்டி பாகு வெள்ளம் மூக்கு கடலை உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கும் சில்லரை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை காரணம் காட்டுவதாகவும், வட மாநில வியாபாரிகள் பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்டுள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் பதுக்கலை இரும்புக்கரம் கொண்டு தடுக்க தவறினால் அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் உயரக்கூடும் என்று ஏச்சரிக்கின்றனர்.