​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டூர் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது

Published : Aug 27, 2022 8:36 PM

மேட்டூர் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது

Aug 27, 2022 8:36 PM

சேலம் மாநகரில், மேட்டூர் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.

சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக முதல் அக்ரஹாரம் ஆற்றோர சாலை பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது, மேட்டூர் குடிநீர் குழாய் மீது பொக்லைன் இயந்திரம் மோதியதில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாகி வருகிறது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், கால்வாய் ஏற்படுத்தி தண்ணீர் தேங்காமல் சாக்கடையில் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

மேலும், குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.