சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் 2ஆவது மிகப்பெரிய ஸ்மார்ட் வாட்சுகளுக்கான சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் உலகளாவிய சந்தை 13% என்ற அளவில் வளர்ச்சி அடைந்த நிலையில், இந்தியா 347% என்ற அளவிற்கு வளர்ச்சியை எட்டி 2ஆம் இடத்தை பிடித்துள்ளதாக கவுன்ட்டர் பாயின்ட் ரிசர்ச் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் நாய்ஸ், பயர்-போல்ட் நிறுவனங்கள் உலகளாவிய சந்தையில் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்திலும், சாம்சங் நிறுவனம் 2ஆம் இடத்திலும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.