17 வயது நிரம்பியவர்கள் nvsp.in என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி மூலம் வாக்காளர் அடையாள அட்டைக்கு முன்பதிவு செய்தால், 18வது பிறந்தநாள் பரிசாக வாக்காளர் அட்டை வீடுதேடி வரும் என்று இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே கூறியுள்ளார்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய அனுப் சந்திரா, ஒரு வாக்காளர் கூட விடுபட்டுவிடகூடாது என்பது தான் தேர்தல் ஆணையத்தின் இலக்கு என தெரிவித்தார்.