சுத்துபோட்ட முதலைகள்.. உயிருக்கு போராடிய சிறுவன் மீட்கப்பட்ட காட்சி..!
Published : Aug 27, 2022 5:51 PM
நூற்றுக்கணக்கான முதலைகள் சூழ ஆற்றுக்குள் தவறி விழுந்ததால் உயிருக்குப் போராடிய சிறுவனை படகில் வந்த மீட்புக்குழுவினர் காப்பாற்றிய காட்சி வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவின் சம்பல் நதியில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன. ஆற்றின் கரையோரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ஊருக்குள் புகுந்துவிடும் முதலைகளை பிடித்தால் கூட, அவை சம்பல் நதியில் விடப்படுகின்றது. இந்த நிலையில் வெள்ளம் பாய்ந்தோடிய அந்த நதிக்குள் தவறி விழுந்த சிறுவன் ஒருவனை ஏராளமான முதலைகள் சுற்றிவர தொடங்கின, இதனை கண்டு சிறுவன் கூக்குரலிட்டான்.
சிறுவனை முதலைகள் கடித்து தின்று விடுமோ என்று அங்கிருந்தவர்கள் பதறிக் கொண்டிருக்க, ஆற்றுக்குள் சிறுவன் அலறித்துடித்தான். தக்க சமயத்தில் மின்னல் வேகத்தில் எந்திர படகில் வந்த மீட்பு குழுவினர் அந்த சிறுவனை கையை கொடுத்து தூக்கி காப்பாற்றினர். தக்க நேரத்தில் ஆற்றுக்குள் படகுடன் களமிறங்கி சிறுவனை மீட்ட குழுவினரை கூடி யிருந்த பொதுமக்கள் பாராட்டினர் இந்த மீட்புக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது