​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புகிறது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published : Aug 27, 2022 5:21 PM

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புகிறது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Aug 27, 2022 5:21 PM

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை இலவசமாக இருந்தால் தான் அதிக மக்கள் பயன்படுத்த முன்வருவார்கள் என்றும் கூறினார். வெளிப்படையான டிஜிட்டல் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் மயமாக்கலை செயல்படுத்தக்கூடிய தளங்களை ஊக்கப்படுத்தி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.