லடாக் எல்லையில் சீனாவுடனான முரண்பாடு நீடிக்கும் நிலையில் இந்திய ராணுவம் மலையுச்சிகளில் பீரங்கிகளை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இலகு ரக பீரங்கிகளுடன் சீனப்படைகளின் நகர்வைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பிராஜக்ட் ஜோராவர் என்ற திட்டத்தை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள தன்னை ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளது.
மலைப்பகுதி என்பதனால் கனரக பீரங்கிகளை அடிவாரத்திலும் இலகு ரக பீரங்கிகளை மலைகளின் மேல் பகுதிகளிலும் ராணுவம் நிறுத்தி வைக்கிறது. ஏவுகணைத் தாக்குதலை முறியடிக்கவும் டிரோன்களை வீழ்த்தவும் பீரங்கிகள் ராணுவத்தின் மிகப்பெரிய உறுதுணையாக விளங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்