​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி லட்டு மட்டுமில்ல இனி இந்த பிளாஸ்டிக் சாம்பார் வாளியும் பேமஸ் தான்..!

Published : Aug 27, 2022 6:28 AM



திருப்பதி லட்டு மட்டுமில்ல இனி இந்த பிளாஸ்டிக் சாம்பார் வாளியும் பேமஸ் தான்..!

Aug 27, 2022 6:28 AM

திருப்பதியில் உள்ள ஓட்டல்களில் தடையை மீறி பிளாஸ்டிக் பெயிண்ட் வாளிகளில்  கொதிக்கும் சாம்பாரை அடைத்து எடுத்துச்சென்று  சாப்பிட வழங்குவதால், நீண்ட  நேரம் காத்துக்கிடந்து சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பக்தர்களின் உடலுக்கு கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி சின்ன துண்டு பிளாஸ்டிக் பேப்பர் கூட திருமலைக்கு சென்று விடக்கூடாது என்று அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் காட்டும் கெடுபிடியில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க வைத்திருக்கும் சோட்டா பீம் வாட்டர் கேன் கூட பிளாஸ்டிக் என்பதால் குப்பை தொட்டிக்கு சென்று விடும்..!

அந்த அளவுக்கு திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கடுமையான தடை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த திருமலைக்கு செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் முடித்து விட்டு குடும்பத்துடன் வயிறார ஓட்டலுக்கு சாப்பிடச்சென்றால், அங்கே பயன்படுத்தும் பிளாஸ்டிக் டப்பா போன்ற வாளிகளை பார்த்தால் உணவுப்பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாவது நிச்சயம்..!

பெயிண்ட் அடிக்க பயன்படுத்தி விட்டு வீசப்பட்ட வாளிகளை சுத்தம் செய்து அவற்றில் தான் சில்வர் அண்டாவில் இருக்கும் சாம்பார், ரசம், வத்தகுழம்பு போன்றவை அள்ளப்பட்டு அடைக்கப்படுகின்றது

கொதிக்க கொதிக்க பிளாஸ்டிக் வாளியில் அடைக்கப்படும் சாம்பாரை தான் அங்குள்ள ஓட்டல்களில் சுட சுட பறிமாறுவதாக குற்றஞ்சாட்டும் உணவுப்பிரியர்கள், சூடு காரணமாக பிளாஸ்டிக் உருகி அது சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்களில் கலப்பதால் உடலுக்கு ஊறுவிளைவிப்பதாக தெரிவிக்கின்றனர்

இதனால் சில ஓட்டல்களில் சாப்பிடும் பக்தர்கள் வயிற்றுவலிக்கு ஆளாவதாகவும், உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் இவற்றை கண்டுகொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்புவதோடு, பசியாற செல்லும் பக்தர்களின் உடல் நலம் கருதியாவது கொதிக்கும் சாம்பாரில் மிதக்கவிடும் பிளாஸ்டிக் வாளியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்