டெல்லி சட்டப்பேரவையில் திங்கட்கிழமையன்று நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்போவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அம்மாநில சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியில் இருந்து விலகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அதற்காக சிறப்பு கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.