நெல்லை கூடங்குளம் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்காக நேற்றிரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விரைவில் பணிகள் நிறைவு பெற்று மீண்டும் மின் உற்பத்தி துவங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 3-வது மற்றும் 4-வது அணு உலைகள் நிறுவும் பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது.