பாகிஸ்தானில், அதிகாலை நேரத்தில் உணவு வழங்க மறுத்த சர்வதேச துரித உணவகத்தை, முன்னாள் காவல் உயரதிகாரி சூறையாடினார்.
கராச்சியின் கோரங்கி சாலையில் இயங்கி வரும் துரித உணவகத்திற்கு, கடந்த இரு நாட்களுக்கு முன் அதிகாலையில் வந்த முன்னாள் காவல் கண்காணிப்பாளரான ஜாம்ஷெத் இனாமுல்லா உணவு வழங்க கேட்டுள்ளார்.
அந்நேரத்தில் உணவு வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், ஊழியர்களை தாக்கி உணவகத்தை சூறையாடினார்.