இத்தாலியில் உள்ள கடலுக்கடியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் இருந்து ரோமானிய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பேராசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான ஃபேபியோ மாடாச்சிரா புதைந்துள்ள நூற்றுக்கணக்கான ஓடுகள் மற்றும் பொருட்களைக் கண்டுபிடித்தார்.
அவர் சேகரித்தவைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், கி.பி 1 மற்றும் 4-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ரோமானிய காலத்தில் கப்பல் மூழ்கியதை உறுதிப்படுத்தினர்.