இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அருகே மிக நெருக்கமாக சீனாவின் போர் விமானங்கள் பறந்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்னையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஜே-11 விமானம் உள்பட சீன போர் விமானங்கள் கடந்த நான்கு வாரங்களாக எல்லைக் கோடு அருகே தொடர்ந்து பறந்து வருவதாகவும், இது, எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு நடைமுறைகளை உளவு பார்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.