செங்கல்பட்டு மாவட்டத்தில், வனத்துறையினர் ஒரே கூண்டில் 76 குரங்குகளை அடைத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்பதால் ஒன்றாக கூண்டிற்குள் சிக்கிகொண்டதாக வினோதமான விளக்கமளித்துள்ளனர்.
அச்சிறுபாக்கத்தில் குரங்கு தொல்லை அதிகரித்ததால் வனத்துறையினர் 300க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து சென்றனர்.
ஒரே கூண்டில் அவர்கள் 76 குரங்குகளை இறுக்கப்பிடித்து அடைத்துவைத்ததாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
அவை ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்பதால் உணவருந்த கூண்டிற்குள் ஒன்றாக வந்து சிக்கிகொண்டதாகவும், வனப்பகுதிக்கு எடுத்து சென்ற போது கூண்டுக்கு 20 குரங்குகள் வீதம்கொண்டுசென்றதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.