ஈரானின் தெற்கு மாகாணம் பார்ஸ் கொட்டித் தீர்த்த கனமழையால் 21 பேர் உயிரிழந்தனர்.
ரவுட்பல் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஏறத்தாழ 10 கிராமங்களை வெள்ளம் மூழ்கடித்த நிலையில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 55 பேர் பத்திரமாக மீட்கபட்டதாக மீட்பு படை தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெள்ள நீரை விட்டு வெளியேற முடியாமல் தவித்தவர்களை மீட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.