10 கோடி ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய டைனோசரின் காலடித்தடங்கள் சீனாவின் தென்மேற்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிச்சுவான் மாகாணத்தின் லெஷன் நகரில் உள்ள உணவகத்தின் முற்றத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் கால் தடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்.
122 அடி நீளமும், 70 டன் எடையும், 3 பேருந்துகளின் நீளத்தையும் கொண்ட மிக நீண்ட கழுத்து கொண்ட இந்த ராட்சத டைனோசர்கள், நிலத்தில் வாழந்த விலங்குகளில் மிகப்பெரியதாக நம்பப்படுகிறது.