அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில்வோருக்கான கட்டாய பணி ஒப்பந்தங்களில் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த மருத்துவர் ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, மனுதாரர் தொடர்ச்சியாக தமிழகத்தில் பணியாற்ற விரும்பாததால், தமிழக அரசு நிர்ணயித்தப்படி, ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது 50 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டது.