பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் மல்யுத்த விளையாட்டு வீரர் கிரேட் காளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பில்லூர் என்ற இடத்தில் சுங்கச்சாவடியை காரில் கடக்க முயன்றபோது ஊழியர்கள் சிலர், காளியை தடுத்து நிறுத்தி அடையாள அட்டையை கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த காளி, சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.