ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் அதிமுகவில் தனக்கான அதிகாரம் தற்போது வரை தொடர்வதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதிமுகவின் சிறப்பு பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் கூரியர் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஒற்றைப் பதவி அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் அல்லது பிற புதிய பதிவியிடங்கள் அதிமுகவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கடிதம் வந்தால் ஏற்க கூடாது என தெரிவித்துள்ளார்.
அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என மேல்முறையீட்டுக்கு செல்ல இருப்பதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.