அமெரிக்காவில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான, பூஸ்டர் ராக்கெட் ஒன்று தரைவழி சோதனையின் போது திடீரென வெடித்து தீப்பிழம்பானது.
விண்வெளிக்கு குறைந்த செலவில் மனிதர்களை சுற்றுலா அழைத்துச்செல்லும் முயற்சியில், அதற்கான விண்வெளி ஓடத்தை தயார் செய்யும் ஆராய்ச்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பூஸ்டர் ராக்கெட் நேற்று டெக்ஸாஸ் மாகாணத்தில் நிலத்திலேயே சோதித்து பார்க்கப்பட்டது.
ஆனால், முதலில் புகையை வெளிப்படுத்திய அந்த பூஸ்டர் ராக்கெட், பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிழம்பானது