உலகிலேயே மிகப்பெரிய திமிங்கல வடிவிலான சரக்கு விமானமான ஏர் பஸ் பெலுகா முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.
நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏர் பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு வசதியாக சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் பெலுகா சரக்கு விமானத்தை தயாரித்து, 1995 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது.
அதில் ஒரே நேரத்தில் 47 ஆயிரம் கிலோ எடையிலான சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த ஏர் பஸ் பெலுகா விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று காலை சென்னையில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின்னர் மீண்டும் அது தாய்லாந்து நோக்கி புறப்பட்டு சென்றது.