​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி புது உச்சம்.. நாளொன்றுக்கு 9,50,000 பீப்பாய் எண்ணெய் இறக்குமதி..!

Published : Jul 12, 2022 7:44 AM

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி புது உச்சம்.. நாளொன்றுக்கு 9,50,000 பீப்பாய் எண்ணெய் இறக்குமதி..!

Jul 12, 2022 7:44 AM

ஜூன் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் வாங்கிய கச்சா எண்ணெய்யின் அளவு நாளொன்றுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய்களாக உயர்ந்து உச்சம் தொட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் இது ஐந்தில் ஒரு பங்கு என கூறப்படுகிறது. அதேபோல் ஜுன் மாதத்தில் நாட்டில் எண்ணெய் ஏற்றுமதி 48 லட்சம் பீப்பாய் என்றும் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை காட்டிலும் 23 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடர்ந்து 2-வது இடத்தில் ரஷ்யா நீடிக்கிறது.