பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் ஏராளமான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கனமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது. இதில் பல கிராமங்கள் தனி தீவுகளாக மாறியது.
முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 மணி நேரத்தில் 126 மி.மீ மழை பதிவானதால் நெடுஞ்சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.