இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 10 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இழப்பு எனத் தனியார் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அரசின் மூன்று நிறுவனங்களும் அடக்கவிலையை விடக் குறைந்த விலைக்குப் பெட்ரோல் டீசல் விற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.