பணமதிப்பிழப்பு கரன்சி நோட்டுக்கள் மூலம் சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கை செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிழப்பு செய்த கரன்சிகள் மூலம், சொத்துக்களை வாங்க பினாமியாக செயல்பட்டதாகக்கூறி கங்கா பவுண்டேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட போதுமான காரணங்கள் இல்லை எனக்கூறி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.