​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை: காவிரியில் 1.10 லட்சம் கன அடி நீர் திறப்பு

Published : Jul 11, 2022 6:52 PM

நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை: காவிரியில் 1.10 லட்சம் கன அடி நீர் திறப்பு

Jul 11, 2022 6:52 PM

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக, காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் மொத்த உயரம் 124.80 அடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் 122.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 50,467 கனஅடி நீர் வரும் நிலையில், 72,964 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மைசூரு மாவட்டத்தில் உள்ள 84 அடி உயரமுள்ள கபினி அணையில் தற்போது 82.71 அடி நீர் உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 28,147 கன அடி தண்ணீர் வரும் நிலையில், 38,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இரு அணைகளும் விரைவில் நிரம்பும் என்பதால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.