இலங்கை அதிபர் அதிபர் கோத்தபயவும் அவரது குடும்பத்தாரும் இலங்கையை விட்டு தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து இன்று காலை அவர்கள் இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பு வந்தடைந்தனர்.
அவர்களுக்காக இரத்மலானை விமானப்படை தளத்தில் ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து அதிபர் கோத்தபயவும், அவரது குடும்பத்தாரும் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றதாகவும், ஆனால், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியதை முதலில் உறுதிபடுத்திய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனா பின்னர் அதனை மறுத்துள்ளார்.