இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
கொழும்புவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் தமது பொறுப்புக்களை ஒப்படைத்து பதவி விலக தயார் என அமைச்சர்கள் அனைவரும் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மக்கள் போராட்டங்கள் மீண்டும் வெடித்ததை தொடர்ந்து அதிபர் கோட்டபயா ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அடுத்தடுத்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.