பின்லாந்தின் தாம்பரே நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சேம்பியன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 94 வயது பகவானிதேவி என்ற மூதாட்டி தங்கப்பதக்கம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் அவர் பந்தய தூரத்தை 24.74 வினாடிகளில் கடந்து வெற்றிப்பெற்றார். மேலும் குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளிலும் அவர் இரண்டு வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.
94 வயதிலும் உலக போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.