​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2023க்குள் சீனாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் - ஐ.நா சபை

Published : Jul 11, 2022 2:07 PM



2023க்குள் சீனாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் - ஐ.நா சபை

Jul 11, 2022 2:07 PM

உலக மக்கள் தொகை தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், அடுத்தாண்டுக்குள் சீனாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு நவம்பருக்குள் உலக மக்கள்தொகை  எட்டு பில்லியனை எட்டும் என்றும் 2050ம் ஆண்டுக்குள் 9 புள்ளி 7 பில்லியனாக உயரும் என்றும் ஐ.நா கணித்துள்ளது.