தெலுங்கானாவில் பெய்துவரும் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பத்ராசலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கனமழை காரணமாக ஜூலை 11 முதல் 13-ம் தேதி வரை 34 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.