சென்னை விமான நிலையத்தில் 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 அடுக்கு மாடி வாகன நிறுத்துமிடம் மக்களின் பயன்பாட்டிற்காக அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.
இரண்டரை லட்சம் சதுர அடி பரப்பளவிலான இந்த வாகன நிறுத்துமிடத்தில் ஒரே நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பார்வையாளர்களுக்காக சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட வணிக வளாகம், உணவகங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் மின்சார வாகனங்களுக்கான மின்சார சார்ஜிங் வசதி முனையங்களும் அமைக்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய ஆணையக வட்டாரங்கள் தெரிவித்தன.