கர்நாடகா மாநிலம் மைசூருவில் சர்வதேச யோகா தினத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். 15 ஆயிரம் பேருடன் இணைந்து பல்வேறு யோகா பயிற்சிகளை பிரதமர் மேற்கொள்கிறார்.
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலம் மைசூருவில் சர்வதேச யோகா தினத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அரண்மை மைதானத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து 15 ஆயிரம் பேர் யோகா பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் 75 இடங்களில் யோகா பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது. யோகா பயிற்சிகளில் 75 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பா.ஜ.க சார்பில் நாடு முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிகளை நடத்த உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச யோகா தினத்தை சிறப்பு கொண்டாடுமாறு அனைத்து மாநில மற்றும் ஊரக உள்ளாட்சி பிரதிதிகளுக்கு பிரதமர் மோடி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.