தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஜூன் 22 முதல் 24ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.