டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்தின் ஜபல்பூருக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானம், தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், அந்த விமானத்திற்குள் காற்றழுத்த மாறுபாடு உணரப்பட்டதால் மீண்டும் டெல்லிக்கே விமானம் திருப்பி விடப்பட்டதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, இன்று காலையில் பாட்னாவில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தீ பற்றியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் மீது பறவை மோதியதால், ஒரு இன்ஜின் செயலிழந்து தீ பிடித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.